சித்த மருத்துவப் பணி

கற்ப அவிழ்தம்


சித்த மருத்துவர்களுக்கும் சித்த மருத்துவ மாணவர்களுக்கும் சித்த மருத்துவம் மீதான நம்பிக்கையை மிகுதி ஆக்குவதற்கும், சித்த மருத்துவத்தின் பல்வேறு கூறுகளைப் பற்றிய மேலதிக தகவல்களை கொடுப்பதற்கும்,பொதுமக்களுக்கு சித்த மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் 1992ஆம் ஆண்டு கற்ப அவிழ்தம் என்ற சித்த மருத்துவ மாத இதழ் உலகத் தமிழ் மருத்துவக் கழகத்தால் தொடங்கப்பட்டு இன்றுவரை சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
 
சித்தமருத்துவ மாணவர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு இன்று வரை சிறந்த ஊடகமாக திகழ்ந்து வருகிறது. சூன் 2020 வரை 337 இதழ்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

மலைப்பயணங்கள்


சித்த மருத்துவ மாணவர்கள் மூலிகைகளை அதன் இருப்பிடங்களில் காண்பதற்கும்,அடையாளம் அறிந்து கொள்வதற்கும்,வளர் இயல்பை புரிந்து கொள்வதற்கும் தொடர் மலைப்பயணங்கள்  
1996-ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழ் மருத்துவக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


வற்மம் பயிற்சி வகுப்புகள்


மறைபொருளாக இருந்த வற்மத்தை சித்த மருத்துவர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வற்ம வல்லுனர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் உலகத் தமிழ் மருத்துவக் கழகத்தால் 1993 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றன.

பெருமருந்து பயிற்சி முகாம்கள்


சித்த மருத்துவர்களுக்கு மூலிகை,உலோக,உபரச,பாடாண,காரசார பெருமருந்துகளை தமிழர்களின் நுட்பமான தொல்லறிவியல் செய்முறையாகக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதுவரை நடத்தப்பட்ட இருபதிற்கும் மேற்பட்ட பயிற்சிகளில் கல்ந்து கொண்டவர்கள் தமிழகத்தின் சிறந்த சித்த மருத்துவர்களாக மிளிர்கிறார்கள்.

நூல்கள் வெளியீடு 


2007ஆம் ஆண்டு தமிழர் வரலாறு பற்றியும் தமிழ் மருத்துவ வரலாறு பற்றியும், சித்த மருந்துகளின் பெயர்கள், பயன்பாடுகள் என ஐந்து விதமான சித்த மருத்துவ நூல்கள் வெளியிடப்பட்டன. வற்ம தொக்கண தடவு முறைகள் பற்றிய குறுந்தகடும் வெளியிடப்பட்டது.

மாநில வள மையம்  


உலகத் தமிழ் மருத்துவக் கழகத்தின் மாநில வள மையம் 1998 ஆம் ஆண்டில், பாபநாசத்தில் உருவானது. அன்றிலிருந்து இன்றுவரை மாநில வள மையத்திலேயே உலகத்தமிழ் மருத்துவக் கழகம் தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.

Web page was started with Mobirise